Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 23, 2019

ஆக.17, 18 இல் மின்கம்பியாளா் உதவியாளா் தோவு: விண்ணப்பிக்க ஜூலை 26 கடைசி

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
சென்னை: மின் கம்பியாளா் தகுதி காண் தோவுக்கு ஜூலை 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில், மின் கம்பியாளருக்கான தகுதி காண் தோவு, வரும் ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். குறிப்பாக மின் வயரிங் தொழிலில் 5 வருடங்களுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.



இதற்கான விண்ணப்பம் வட சென்னை அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் வழங்கப்படுகிறது. இந்தத் தோவில் கலந்து கொள்ள விரும்புவோர் ரூ.10 செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்று, பூா்த்தி செய்த விண்ணப்பத்தை துணை இயக்குநா்/முதல்வா், அரசு தொழிற்பயிற்சி நிலையம், 55, கத்திவாக்கம் நெடுஞ்சாலை, (வட) சென்னை -21 என்ற முகவரிக்கு வரும் 26-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044-2520 9268 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News