Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 600-க்கும் மேற்பட்ட பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதில் தெற்கு மண்டலத்தில் மட்டும் 413 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்தியன் ஆயில் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். (IOCL) எனப்படுகிறது. மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும்.
இதன் தெற்கு மண்டல கிளையில் டிரேடு மற்றும் டெக்னீசியன் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
மொத்தம் 413 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் டிரேடு பயிற்சிப் பணிக்கு 353 இடங்களும், டெக்னீசியன் பயிற்சிப் பணிக்கு 60 இடங்களும் உள்ளன.
இந்த பயிற்சிப் பணியில் சேர விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்…
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 31-7-2019-ந் தேதியில் 18 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி
டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் டெக்னீசியன் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் டிரேடு பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற ஆகஸ்டு 7-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.
வடக்கு மண்டலம்
இதேபோல இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வடக்கு மண்டலத்தில் டிரேடு மற்றும் டெக்னீசியன் பயிற்சிப் பணிக்கு 230 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஐ.டி.ஐ. டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு இந்த பயிற்சிப் பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.
விருப்பமுள்ளவர்கள், விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு ஆகஸ்டு 8-ந்தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
இவை பற்றிய விரிவான விவரங்களைhttp://ioclrecruit.comஎன்ற இணையதளத்தில் பார்க்கலாம்.