Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 24, 2019

பிளஸ் 2 துணைத் தேர்வர்களுக்கான விடைத்தாள் நகல் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்


பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தோர், புதன்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜூன் 2019 மேல்நிலை முதலாமாண்டு ((+1 arrear) / இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்தோர், புதன்கிழமை (ஜூலை 24) காலை 10 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து, விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இதேபோல், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இதே இணையதளத்தில் p application for retotalling/revaluation என்ற தலைப்பினை ஸ்ரீப்ண்ஸ்ரீந் செய்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம்.
இந்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து இரு நகல்களுடன், கட்டணத்தை (மறுமதிப்பீடு - பாடம் ஒவ்வொன்றுக்கும் - ரூ.505) (மறுகூட்டலுக்கு - உயிரியல் பாடம் மட்டும் ரூ. 305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205) உரிய முதன்மைக் கல்வி அலுவலரிடம் வியாழக்கிழமைக்குள் (ஜூலை 25) செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.