Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 24, 2019

தேசிய வரைவு கல்விக் கொள்கை: கருத்து தெரிவிக்க ஜூலை 31 கடைசி


புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு மீது கருத்து தெரிவிக்க ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாளாகும்.
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டுத் துறை அண்மையில் தேசிய கல்விக் கொள்கை வரைவு வெளியிட்டது. ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே இந்த கல்விக் கொள்கை வெளியிடப்பட்டிருந்தது.


இதையடுத்து, அது தமிழாக்கம் செய்யப்பட்டு இணையதளத்தில் (www.tnscert.org) வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொது மக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கருத்துத் தெரிவிக்க அறிவிக்கப்பட்ட கால அவகாசம் ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.