Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 3, 2019

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு: கலந்தாய்வு ஜூலை 8-இல் தொடக்கம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த பி.ஏ., எல்.எல்.பி. இளநிலை சட்டப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 8-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
முதல் கட்டமாக, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள சீர்மிகு சிறப்புப் பள்ளியில் வழங்கப்படும் ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் படிப்பு கலந்தாய்வை நடத்தியது.


அதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள 10 அரசு சட்டக் கல்லூரிகள், ஒரு தனியார் கல்லூரியில் இடம்பெற்றிருக்கும் 1,411 ஐந்தாண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூலை 8-ஆம் தேதி தொடங்கும் இந்த கலந்தாய்வு 11-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 16-இல் நடத்தப்பட உள்ளது. இதற்கான கட்-ஆஃப் மதிப்பெண், தேதி உள்ளிட்ட விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Popular Feed

Recent Story

Featured News