Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 3, 2019

மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான பேருந்து பயண அட்டை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான இலவச பேருந்து பயண அட்டை வழங்க இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் எழிலரசன் பேசியது:
பள்ளி மாணவர்களுக்கான இலவசப் பேருந்து பயண அட்டை சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வழங்கப்படவில்லை. இந்த ஆண்டும் பயண அட்டை இன்னும் வழங்கப்படவில்லை. அதனால், பழைய பயண அட்டையைக் காண்பித்துச் செல்லலாம் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால், பள்ளிக்குப் புதிதாகச் செல்லும் மாணவர்கள், அதுபோல செல்ல முடியாத நிலை உள்ளது என்றார்.


அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குறுக்கிட்டுக் கூறியது: பள்ளி சீருடை அணிந்து செல்லும் மாணவர்கள் அனைவரையும் இலவசமாக பேருந்தில் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளார். மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான இலவச பேருந்து பயண அட்டை கொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

Popular Feed

Recent Story

Featured News