Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 25, 2019

தேர்வில் வெற்றுத்தாளை மடித்துக் கொடுத்தாலே வேலை!! மேற்கு வங்கத்தில்


எல்லோரும் தமிழ்நாட்டில் OC பிரிவினருக்கு வருமானத்தின் அடிப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு 28.5 மதிப்பெண்கள் நிர்ணயம் செய்திருப்பதைப் பற்றியேப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் மேற்கு வங்காளத்தில் அவர்கள் பூஜ்யம் மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானதாம். அதாவது அவர்கள் ஒன்றுமே எழுதாமல் வெறும் பேப்பரைக் கொடுத்துட்டு வந்தாலும் போதுமாம்.. வங்கி வேலை அவர்களுக்கு உண்டாம்..

ஆதாரம் : https://www.facebook.com/189960617729403/posts/2630762190315888/

நீட் தேர்வு எதற்கு?

திறமையானவர்களைத் தேர்வு செய்வதற்காம்..

ஞாபகம் இருக்கிறதா?



வாழ்க ஜனநாயகம்..

அது இருக்கட்டும்...

முதலில் Economically backward class அதாவது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவினருக்கான வரையறை என்னவென்று சொல்லுங்கள்..

ஆண்டிற்கு எட்டு லட்சம் அதாவது மாதம் சுமார் 70,000 வருமானம் உள்ள முற்பட்ட பிரிவினர் மட்டும் இந்த தேசத்தில் ஏழைகளா?

இது சரியான அளவுதானா?

சரி.. அது இருக்கட்டும்..

தமிழகத்தை எடுத்துக் கொள்வோம்..
13% மக்கள் முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள்.

அவர்களில் 8 லட்சம் வரை வருமானமுள்ள முற்படுத்தப்பட்ட ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு..

சரி..



பிற்படுத்தப்பட்ட மக்கள் எவ்வளவு பேர் இருக்கின்றார்கள்? அவர்களுக்கான இடஒதுக்கீட்டு அளவு எவ்வளவு?

இந்தியாவில் BC : 41%, SC : 16.6% ST: 9% ஆக மொத்தம் 66.6% வருகிறது.

ஆனால் அகில இந்திய அளவில் இட ஒதுக்கீடு 50% மிகக்கூடாது என்பது என்ன வரையறை?

இது எந்த வகையில் நியாயம் என்று சொல்லுங்கள்?

அகில இந்திய அளவில் 66.6% இட ஒதுக்கீட்டை மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டு, அவர்களுக்கும் 13.3% கொடுத்துவிட்டுப் போங்கள்..

யார் வேண்டாம் என்று சொன்னது?



நீட் தேர்வில் ST மாணவர்களுக்குக் குறைந்த பட்ச மதிப்பெண்களை வைத்துவிட்டு, அந்த மதிப்பெண்ணில் அந்த மாணவர்கள் இல்லை என்று சொல்லிவிட்டு அந்த சீட்டை யாருக்கு நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கவனித்தால், இவர்கள் மே.வங்காளத்தில் F.C பிரிவினருக்கு 0 மதிப்பெண் பெற்றாலும் ஏன் வேலை கொடுத்தார்கள் என்பது புரியும்..

இது சரி செய்யப்பட வேண்டிய அநியாயம்.