Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 4, 2019

ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups




தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் மதுரை கிளையில் காலியாக உள்ள 30 Senior Factory Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Factory Assistant

காலியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 18 - 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை General Manager M.D.C.M.P.U. Ltd., என்ற பெயரில் மதுரையில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணங்கள் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: General Manager, Madurai District Cooperative Milk Producers, Union Ltd, Sathamangalam, Madurai - 625 020.



மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdmdusfare240619+%281%29.pdf/9f1c21d2-3017-04bb-1967-693b2c56057b&noticeURL=/documents/20142/0/cn1mdu200619.pdf/edba861b-e073-f8ec-0494-2d363d3df20f&noticeName= என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.07.2019

Popular Feed

Recent Story

Featured News