Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 7, 2019

பிசி, எம்பிசி, சீர்மரபினர் கல்வி உதவித்தொகை பெற அழைப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில்நுட்ப கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.


முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று வரும் அக்.15-க்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கிக் கணக்கு எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும். வரும் செப்.1-ஆம் தேதியில் தொடங்கும் கல்வி உதவித்தொகைக்கு புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை அக்.25-க்கு முன்பும்,


புதிய விண்ணப்பங்களை நவ.30-க்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகலாம். அரசு இணையதள இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் உள்ளது. எனவே, மாணவ, மாணவியர்கள் உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கரூர், மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News