Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 7, 2019

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க பேரவைக் கூட்டம் அவிநாசியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்ட கிளைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் சங்க வட்ட கிளைத் தலைவர் நாகராஜ், மாவட்ட இணைச் செயலாளர் நடராசன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். கூட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 21 மாத ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, ஊராட்சி செயலாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட மதிப்பூதியம்,


தொகுப்பூதியம் பெறும் அனைவருக்கும் மாதம் ரூ. 9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இணைச் செயலாளர் மாயன்குட்டி, வட்ட கிளை செயலாளர் சாமிநாதன், இணைசெயலாளர் விஜயலட்சுமி, பொருளாளர் சண்முகம், துணைத் தலைவர் முத்துசாமி ஆகியோர் பங்கேற்றனர்.