Join THAMIZHKADAL WhatsApp Groups

நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) இல்லாமல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு, அவர்கள் விண்ணப்பிக்காமலேயே அந்த எண்ணை ஒதுக்கீடு செய்ய வருமான வரித் துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் பி.சி. மோடி கூறியதாவது: ஆதார் எண் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால், நிரந்தரக் கணக்கு எண் முறை ஒழிந்துவிட்டதாக அர்த்தமில்லை.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டிலும், அந்த இரண்டு எண் முறைகளும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுவது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
வருமான வரித் தாக்கல் செய்பவர்களின் ஆதார் எண், நிரந்தரக் கணக்கு எண் ஆகிய இரண்டையும் இணைக்க வேண்டியது தற்போது கட்டாயமாக்கப்படுகிறது.
அந்த வகையில், ஆதார் எண்ணை மட்டும் அடிப்படியாகக் கொண்டு வருமான வரி தாக்கல் செய்வோருக்கு, நிரந்தரக் கணக்கு எண்ணும் அவசியமாகிறது.
எனவே, அவர்கள் விண்ணப்பிக்காவிட்டாலும்கூட, அவர்களுக்கு தாமாகவே முன்வந்து நிரந்தர கணக்கு எண்ணை ஒதுக்கீடு செய்ய வருமான வரித் துறை முடிவு செய்துள்ளது என்றார் அவர்