Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 8, 2019

சூர்யாவுக்கு அகரம் ஃபவுண்டேஷன், கார்த்திக்கு உழவன் ஃபவுண்டேஷன்!


செல்ஃபி எடுக்கப்போனா செல்போனை தட்டிவிடுறது வேணும்னா நடிகர் சிவக்குமாரோட பலவீனமா இருக்கலாம்.
ஆனால், சம்பாதிப்பதில் ஒரு பகுதியை பொதுநலனுக்காக செலவிட வேண்டும் என்று சொல்லிக்கொடுத்ததை தட்டாமல் பின்பற்றும் இரண்டு மகன்களை பெற்றது அவரின் பெரும்பலம்.
நடிகர் சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு இடையூறு வரும்போதெல்லாம் ஆபத்பாந்தவனாக வந்து உதவிசெய்வது அனைவரும் அறிந்தது.


அதேப்போல் தம்பி கார்த்தி, விவசாயிகளுக்கு தன்னால் இயன்றதைச் செய்ய 'உழவன் ஃபவுண்டேஷன்" அமைத்து செயல்பட்டு வருகிறார்.
சிறுகுறு விவசாயிகளின் பணிகளை எளிமையாக்கும் கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என உழவன் ஃபவுண்டேஷன் அறிவித்துள்ளது
உழவன் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக மண்புழு விஞ்ஞானி முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், இயற்கை வேளாண் அறிஞர் பாமயன், மருத்துவர் கு.சிவராமன், இயற்கை விவசாயிகள் அமைப்பின் அனந்து, பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம் ஆகியோர் உள்ளனர். பரிசுப்போட்டியில் வெல்லும் கண்டுபிடிப்பாளர்களை மேற்படி நிபுணர் குழு தேர்வு செய்யும்