Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 28, 2019

உதவி செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் உதவி செவிலியர் பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாநகராட்சி பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் இரண்டாண்டு கால உதவி செவிலியர் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.


அதில் சேருவதற்கு சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களின் வாரிசுகளுக்கும், மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம். தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் வரும் 31-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16 வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.