Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 28, 2019

மத்திய அரசின் செம்மொழி நிறுவனத்தில்.! பல்வேறு வேலை அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.!!


செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள பணி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் துணை இயக்குநர், ஆய்வு அலுவலர், இளம் ஆய்வு அலுவலர் ஆகிய கல்வி சார்ந்த பணிகளுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் கல்வி சாரா பணியிடங்களுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி, தனி செயலர், உதவி நூலகர், சுருக்கெழுத்தர், அலுவலக மேற்பார்வையாளர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க https://www.cict.in/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.