Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 7, 2019

விமானப்படையில் ஏர்மேன் வேலை வேண்டுமா?





இந்திய விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு தகுதியான திருமணமாகாத இந்திய குடியுரிமை பெற்ற இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி: குரூப் எக்ஸ்: விண்ணப்பதாரர்கள் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கில பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2, இன்டர்மீடியட் அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

குரூப் ஒய் (நான்-டெக்னிக்கல்): விண்ணப்பதாரர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2, இன்டர்மீடியட் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ஆங்கிலத்தில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

குரூப் ஒய் (நான்-டெக்னிக்கல்): மெடிக்கல் அசிஸ்டன்ட் டிரேடு பயிற்சியில் சேர விரும்புபவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2, இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21க்குள் இருக்க வேண்டும். அதாவது 19.07.1999 மற்றும் 01.0.2003 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்திலும், ஆகிய இரு தேதிகளிலும் பிறந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

பணி காலம்: 20 ஆண்டுகள் கொண்டது. பின்னர் விருப்பம் மற்றும் தகுதிக்கேற்ப 57 வயது வரையும் பணி நீடிப்பு பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.airmenselection.cdac.in என்ற இணைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.



விண்ணப்பக் கட்டணம்: ரூ.250

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.07.2019

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 21.09.2019 முதல் 24.09.2019 தேதி வரை நடக்கிறது.

மேலும் முழுமையான விவரங்களை அறிய www.airmenselection.cdac.in அல்லது www.careerindianair force.cdac.in ஆகிய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.