Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 7, 2019

நிலக்கரி நிறுவனத்தில் 5500 தொழில்பழகுநர் பயிற்சி

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups



நிலக்கரி நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு 5 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நிலக்கரி நிறுவனங்களில் ஒன்றான எஸ்.இ.சி.எல் நிறுவனத்தில் 5500 தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 5.500

பணி: தொழில்பழகுநர் பயிற்சி

பயிற்சி அளிக்கப்படும் பிரிவுகள்: பிட்டர், பிளம்பர், கார்பெண்டர், டர்னர், வெல்டர், மெஷினிஸ்ட், ஸ்டெனோகிராபர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்படும்.

தகுதி: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு முடித்து சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.



வயதுவரம்பு: விண்ணப்பதாரர் 23.07.2019 ஆம் தேதியின்படி 16 முதல் 18 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் முதலில் www.apprenticeship.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பெயரை பதிவு செய்துவிட்டு, பின்னர் நிலக்கரி நிறுவன http://www.secl-cil.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.07.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.secl-cil.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Popular Feed

Recent Story

Featured News