Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 2, 2019

ஆக.25-இல் குரூப் 4 இலவச மாதிரித் தேர்வு


தமிழகத்தின் 25 நகரங்களில் குரூப் 4 போட்டித் தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு, ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெறுகிறது.
கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6,491 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக சென்னை (அண்ணாநகர் மற்றும் அடையாறு), காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை,

சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை, ஊட்டி, திருப்பூர், பழனி, விழுப்புரம், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோயிலில், சங்கர் ஐ.ஏ.எஸ் அகாதெமி சார்பில் குரூப் 4 தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் www.shankariasacademy.com , www.tnpscthervupettagam.com என்ற இணையதளங்களில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 044-43533445, 45543082 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சங்கர் ஐ.ஏ.எஸ் அகாதெமியின் நிர்வாக இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.