Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, August 28, 2019

சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களை காப்பாற்றினால் ரூ.5000: முதல்வர் அதிரடி அறிவிப்பு



சாலைகளில் விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்து உயிருக்காக போராடி கொண்டிருப்பவர்களை பலர் காப்பாற்ற முன்வருவதில்லை. அதற்கு காரணம் போலீஸ் பிரச்சினை, வழக்கு உள்பட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து இருப்பதுதான். இதனால் 'நமக்கென்ன' என்று என்ற நினைப்பில் பலர் சென்று விடுகின்றனர்



இந்த நிலையில் சாலை விபத்தில் காயமடைபவர்களை காப்பாற்றி
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நபருக்கு 5000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு செய்துள்ளார்.

இதேபோன்ற ஒரு அறிவிப்பு தமிழக அரசிடம் இருந்தும் வெளிவர வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment