Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, August 28, 2019

செப்.6 முதல் தொடர் போராட்டம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. சென்னையில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்: அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும். நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும்.

தேசியக் கல்விக் கொள்கை வரைவைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்பட ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தொடர்ந்து, செப்டம்பர் 13-ஆம் தேதி கல்வி மாவட்டத் தலைநகரங்களில் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். தொடர்ந்து செப்டம்பர் 24-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடைபெறும். முன்னதாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறும் என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment