Search This Blog

Sunday, August 4, 2019

பி.எட். கலந்தாய்வு ஆக. 7-இல் தொடக்கம்

0 comments
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ஆம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடத்தப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை கடற்கரை சாலையில் உள்ள லேடி விலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவன கல்லூரியில் நடத்தப்படுகிறது.


இந்த ஆண்டுக்கான விண்ணப்பப் பதிவு, ஒரு வாரத்திற்கு முன்னர் நிறைவடைந்தது. இதையடுத்து வரும் புதன்கிழமை கலந்தாய்வு தொடங்கும். விண்ணப்பதாரர்களின், "கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில் வரும் 13-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூடுதல் தகவல்களை http://www.ladywillingdon.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.