Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, August 7, 2019

அத்திவரதர் தரிசனம் - 9 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!


காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13,14,15 ஆகிய நாட்களிலும், பக்ரித், சுதந்திர தினம், வார விடுமுறைகள் என மொத்தம் 9 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் தேவையான வசதிகள் குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அத்திவரதர் தொடர்பான புத்தகத்தை முதல்வர் வெளியிட்டார். ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். முதல்வரின் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிதசனத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13,14,15 ஆகிய நாட்களிலும், பக்ரித், சுதந்திர தினம், வார முறைகள் என மொத்தம் 9 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் வாகனங்களை பள்ளி வளாகங்களில் நிறுத்தவும், பக்தர்கள் ஓய்வெடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் காஞ்சிபுரம் நகர பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.