Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, August 7, 2019

விண்வெளித்துறையில் ஆய்வு மேற்கொள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு: விக்ரம் சாராபாய் விண்வெளி சவால் போட்டி


ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு விண்வெளித்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள ஆர்வத்தை தூண்டும் வகையில் விக்ரம் சாராபாய் விண்வெளி சவால் என்ற பெயரில் 30 கிராம் எடைகொண்ட செயற்கைக்கோளை தயாரிக்கும் போட்டியை அறிவித்திருந்தது.
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு தமிழகத்தில் தேர்ந்தெடுத்த 12 பள்ளிகளில் சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளியும், கரூர் மாவட்ட வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் அடங்கும்.



சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களான தமிழ்பாரதி, பாலமுருகன், ராகுல், ஜெயந்த் நாராயணன் ஆகியோர் பள்ளியின் செயலாளர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் எழுதுகோளில் பயன்படும் மையை நிரப்பி 30 கிராம் இடையிலான செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர். இந்த செயற்கைக்கோள் மூலம் விண்வெளியில் எழுதும் எழுதுகோல் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி தெரியவரும் என்றும் மையில் ஏற்படும் நிற மாறுபாடு, படிக அளவிலான மாறுபாடு ஆகியவை மூலம் விண்ணில் மிதக்காமல் கரையும் வகையிலான செயற்கைக்கோளை உருவாக்க இயலும் என்றும் மாணவர்கள் கூறினர்.



இதேபோல் கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசுப்பள்ளி மாணவர்களான நவின்குமார், சுகந்த, பசுபதி, விஷ்ணு, ஜெகன் ஆகியோர் ஒன்றிணைந்து ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் 30 கிராம் எடையிலான செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர். சீமை கருவேல மரங்களின் வேர், தண்டு, பட்டை, இலை, பூ, காய், விதை ஆகியவற்றை சாறாக பிழிந்து பின் உலரவைத்து படிகமாக்கி அதை இந்த செயற்கைக்கோளில் நிரப்பியுள்ளனர். இந்த செயற்கைக்கோள் விண்வெளிக்கு சென்று பின் கீழே வரும் போது வளிமண்டலத்தின் அழுத்தம், சூரிய கதிர்வீச்சின் தாக்கம், ஈரப்பதம் உள்ளிட்டவை இந்த பதிகத்தில் உண்டாக்கும் விளைவுகளினால் அதன் ஜீன்கள், டி.என்.ஏ. வடிவில் ஏற்படும் மாறுபாடுகளை கண்டறிந்து அதன் மூலம் சீமை கருவேல மரங்களை முற்றிலும் அழிப்பதற்கான வழிவகைகளை கண்டறிய உள்ளதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.



காஞ்சிபுரம் மாவட்டம் சிறுச்சேரியிலுள்ள உள்ள ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா வளாகத்தில் இருந்து வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேடி ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ராட்சத பலூன்கள் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் அனுப்பப்படவுள்ளனர். குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும் ஹீலியம் பலூன் வெடித்து செயற்கைக்கோள்கள் தனியாகப் பிரிந்து வானிலை நிலைமை குறித்த தகவல்களை சேகரித்துக்கொண்டு பாராசூட் உதவியுடன் பூமிக்கு வரும் என கூறப்படுகிறது.