Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 9, 2019

சர்க்கரை நோயாளிகளுக்கு தீர்வு தரும் கேழ்வரகு மாவு புட்டு



கேழ்வரகு மாவில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இரத்ததில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு. அதோடு உடல் பருமன் பயம் கொண்டோர் இதை தாராளமாக சாப்பிடலாம். கால்சியம் அளவையும் தக்க வைப்பதால் எலும்புகள் உறுதியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு – அரை கிலோ

உப்பு – கால் ஸ்பூன்

தேங்காய் – அரை மூடி



நாட்டு சர்க்கரை – 5 ஸ்பூன்

நெய் – ஒரு ஸ்பூன்

தண்ணீர் – ஒரு கப்

ஏலக்காய் – 4

செய்முறை :

கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி உப்பு சேர்த்து கலக்கவும். பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசையவும். மாவு கெட்டியாக இல்லாமல் உதிரி உதிரியாக கட்டிகள் இல்லாமல் பிசையவும். பின் இட்லி குண்டான் தட்டில் பருத்தித் துணி விரித்து அதன்மேல் இந்த மாவைக் கொட்டி பரப்பவும். இட்லி சுடுவதற்கு ஊற்றும் தண்ணீரின் அளவையே இதற்கும் ஊற்றவும். தண்ணீர் கொதித்தபிறகு மாவு தட்டை வைக்கவும். மற்ற இட்லி தட்டுகளைக் காலியாக வைத்து மாவு உள்ள தட்டை மூன்று அல்லது நான்காம் அடுக்கில் வைக்கவும்.



20 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். மாவு வெந்துவிட்டதா என்பதை அறிய கையில் எடுத்து உதிரியாக வருகிறதா என தேய்த்து பார்க்கவும். கையில் ஒட்டாமல் உதிரியாக வந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம். தற்போது வேக வைத்த மாவை பாத்திரத்தில் கொட்டி துருவிய தேங்காய், நாட்டு சர்க்கரை , உடைத்த ஏலக்காய், சர்க்கரை, நெய் சேர்த்து நன்குக் கிளறவும். அவ்வளவுதான் சுவையான கேழ்வரகு புட்டு தயார்..!

இதை மாலை வேலையில் சாப்பிட்டால் நல்ல உணவாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கிய உணவு.