Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 9, 2019

உடலுக்கு போதுமான தண்ணீர் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்



நம்மில் பலர் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. உலகின் மிக முக்கிய இயற்கை வளத்தை விட்டுட்டு,செயற்க்கையாக செய்யும் பானங்களை அருந்தி நாம் நம் உடலை தொடர்ந்து சேதப்படுத்திக்கொள்கிறோம். நீங்கள் பின்வரும் அறிகுறிகளை அடையாளம் கண்டால், நீங்கள் அவசியம் அதிக தண்ணீரை பருகவேண்டும்.

உங்கள் வாய் வறண்டதுபோல் இருந்தால் உங்கள் உடலுக்கு அவசியம் தண்ணீர் தேவை என்று அர்த்தமாகும். இதற்கு சர்க்கரை கலந்த பானங்களை பருகினால் சற்று நேரத்திற்கு மட்டுமே அது தாகம் இல்லாதது போல் தோன்றும். ஆனால் தண்ணீரை பருகினால் நீண்ட நேரத்திற்கு உங்கள் தொண்டையும், வாயும் ஈரப்பதட்டத்துடன் வைத்துக்கொள்ளும்.



உங்கள் தோல் உங்கள் உடலின் மிகப் பெரிய உறுப்பு ஆகும், எனவே அது நீரேற்றமாக எப்போதும் இருக்க வேண்டும். உண்மையில் வறண்ட தோல் போதுமான அளவு தண்ணீர் பருகாததற்கு முக்கியமான அறிகுறிகளில் ஒன்றாகும், இது மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு வருங்காலங்களில் வழிவகுக்கும். வியர்வையின் குறைபாடு என்பது போதுமான தண்ணீர் எடுத்துக்கொள்ளாததற்கு மற்றொரு முக்கிய அறிகுறியாகும், வியர்வை உடலில் குறைந்தால் உடலில் உள்ள அழுக்கை வெளியேற்றுவது இயலாத காரியமாகும். இவைகளை தவிர்க்க வேண்டும் என்றால் நீங்கள் அவசியம் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.

உங்கள் கண்கள் உலர்ந்தும் சிவந்தும் காணப்பட்டால் உங்கள் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளாததற்கு முக்கிய அறிகுறியாகும். இதனால் அழும்பொழுது மேலும் எரிச்சலை ஏற்படுத்தும். உங்கள் குருத்தெலும்பு மற்றும் முதுகெலும்பு வட்டுகள் சுமார் 80% வரை நீரால் வளர்க்கின்றது நீங்கள் மூட்டுவலியை அனுபவித்தால் அதற்க்கு தண்ணீர் பற்றைக்குறை கூட முக்கிய அறிகுறியாக இருக்கலாம்.



பெரும்பாலும், தண்ணீர் கொண்டு உயிர்களின் தசைகள் உருவாக்கப்பட்டுள்ளது. குறைவான தசை இருந்தால் நீங்கள் குறைவாக தண்ணீர் எடுத்துக்கொள்கிறீர்கள் என்று பொருள். உடற்பயிற்சிக்கு முன் தண்ணீர் எடுத்துக்கொண்டால் தேவையான தண்ணீரை தேவையான இடங்களில் உடல் தக்க வைத்துக்கொள்ளும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ரத்தத்தில் தண்ணீரை குறைந்தால் ரத்தம் ஆக்ஸிஜனை எடுத்துச்செல்வது குறையும், இதனால் தூக்கத்தன்மை ஏற்பட்டு உங்களை மந்தமாகும் இதனால் அந்த நாள் முழுவதும் அதிக களைப்பை உணர்வீர்கள்.

தண்ணீர் குறைந்தால் நிச்சயம் வயிற்றில் உள்ள உணவை செரிக்க வைக்கும் அமிலங்களின் தன்மை குறையும். இதனால் நெஞ்சு எரிச்சலையும்,செரிமானப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.