Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 9, 2019

உடலுக்கு உற்சாகம் தரும் உளுத்தங்கஞ்சி



தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு – 1/4 கிலோ

கருப்பட்டி – 1/2 கிலோ

ஏலக்காய் – 10

தேங்காய் – 1

சுக்கு – 1/2

செய்முறை:

உளுத்தம்பருப்பை வாசம் வரும் வரை லேசாக வறுத்து, சூடு குறைந்த பின், அரை மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் போட்டு கெட்டியாக அரைக்கவும். தேங்காயை துருவி முதல் பால் கால் லிட்டர் அளவும், இரண்டாம் பால் கால் லிட்டர் அளவும் எடுக்கவும். கருப்பட்டியை நசுக்கி அரை லிட்டர் வெந்நீரில் கரைத்துக்கொள்ளவும். சுக்கையும், ஏலக்காயையும் பொடியாக்கி மாவுடன் சேர்க்கவும். கருப்பட்டியை கரைத்த நீரை வடிகட்டி மாவுடன் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்து திக்காக வரும் போது ஒரு சிட்டிகை உப்பும், இரண்டாம் தேங்காய்ப்பாலும் சேர்க்கவும்.



5 நிமிடம் கழித்து முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி கொதி வராமல் சூடு ஏறியதும் இறக்கவும். அடுப்பில் இருக்கும் பொது அடிக்கடி கிளறி விடவேண்டும். பெண்களுக்கு இடுப்புக்கும், ஆண்களுக்கு நெஞ்சுக்கும் மிகவும் நல்லது. கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி செய்து கொடுத்தால் பிரசவம் சுலபமாக இருக்கும். உளுத்தம் பருப்பை தனியாக நன்கு குழைய வேகவைத்தும் உபயோகப்படுத்தலாம். அல்லது அரைத்தும் உபயோகப்படுத்தலாம். உளுத்தங்கஞ்சி செய்ய தோல் உளுந்தையும் பயன்படுத்தலாம்.