Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 9, 2019

பாலிடெக்னிக் 'விரிவுரையாளர் தேர்வு ரத்து செல்லும்:உச்சநீதிமன்றம்


புதுடில்லி:'பாலிடெக்னிக்' விரிவுரையார் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவு செல்லும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 2017ல் நடந்த 'பாலிடெக்னிக்' விரிவுரையாளர் தேர்வில் 196 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த நீதிமன்றம் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது.சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.இருதரப்பு வாதங்கள் முடிவுற்ற நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு பிறப்பித்த தடை உத்தரவு செல்லும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.