Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 17, 2019

அனுமதிக்கக்கூடாது என அரசு எச்சரிக்கை

பள்ளிக்கு, இருசக்கர வாகனத்தை ஓட்டி வரும் மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுஅறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ,பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும்எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகளுக்கு இருசக்கரவாகனத்தில் வரும்போது ஆசிரியர்கள் தலைக்கவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



பள்ளிகளில் காலையில் நடைபெறும் இறைவணக்கக் கூட்டத்தில், சாலைபாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.அதேபோல், வகுப்புகள் முடிந்து மாணவர்கள் கூட்டமாகவெளியே வந்து பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதால், அதிகளவுஉயிரிழப்பு ஏற்படுவதாகவும், அதனைத் தவிர்க்க , ஒவ்வொரு 15 நிமிடஇடைவெளியில் மாணவர்களை வெளியே அனுப்ப வேண்டும் என்றும்அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும் உடற்பயிற்சி ஆசிரியர்கள், பேருந்து நிலையத்தில் நின்று, ஒருமணி நேரம் மாணவர்களை நெறிமுறைப்படுத்த வேண்டும் எனவும் அரசுஉத்தரவிட்டுள்ளதுமுக்கியமாக பள்ளிகளுக்கு, இருசக்கர வாகனத்தைஓட்டி வரும் மாணவர்களை, வகுப்பறைக்குள் அனுமதிக்கக் கூடாது எனஅந்த செய்திக் குறிப்பில்தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.