Tuesday, September 24, 2019

ரூ.20,072 ஊதியத்தில் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் வேலை


மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (ECIL) காலியாக உள்ள இளநிலை தொழில்நுட்ப அதிகாரி (Junior Technical Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

இளநிலை தொழில்நுட்ப அதிகாரி (Junior Technical Officer) பிரிவில் 200 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:



B.E மற்றும் B.Tech படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

மாதம் ரூ. 20,072 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.ecil.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை http://careers.ecil.co.in/app/Advt_37_2019.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-09-2019

No comments:

Post a Comment