Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 27, 2019

வரலாற்றில் இன்று 27.09.2019

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
செப்டம்பர் 27 (September 27) கிரிகோரியன் ஆண்டின் 270 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 271 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 95 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1066 – இங்கிலாந்தின் முதலாம் வில்லியமும் அவனது படையினரும் சோம் ஆற்றின் வாயிலில் இருந்து புறப்பட்டனர். நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல் ஆரம்பமானது.
1529 – முதலாம் சுலைமான் வியென்னா நகரை முற்றுகையிட்டான்.
1540 – இயேசு சபைக்கு திருத்தந்தை மூன்றாம் பவுல் ஒப்புதல் தந்தார்.
1590 – ஏழாம் ஏர்பன் திருத்தந்தை பதவியேற்ற 13 நாள் இறந்தார். இவரே மிகக்குறுகிய காலம் திருத்தந்தையாக இருந்தவர்.
1777 – பென்சில்வேனியாவின் லான்காஸ்டர் நகரம் இந்த ஒரு நாள் மட்டும் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகராக இருந்தது.
1821 – மெக்சிகோ, எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1825 – உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது.
1854 – “எஸ்.எஸ். ஆர்க்டிக்” நீராவிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1893 – சிகாகோவில் இடம்பெற்ற உலகச் சமயங்களின் பாராளுமன்ற மாநாடு முடிவடைந்தது.
1905 – அல்பேர்ட் ஐன்ஸ்டைன் முதற் தடவையாக E=mc² என்ற சமன்பாட்டை அறிமுகப்படுத்தினார்.
1916 – எதியோப்பியாவில் இடம்பெற்ற அரண்மனைப் புரட்சியை அடுத்து இயாசு மன்னர் பதவியை இழந்தான்.
1928 – ஐக்கிய அமெரிக்கா சீனக் குடியரசை அங்கீகரித்தது.
1937 – கடைசி பாலிப் புலி கொல்லப்பட்டது.


1938 – ஆர்.எம்.எசு. குயின் எலிசபெத் பயணிகள் கப்பல் கிளாஸ்கோவில் வெள்ளோட்டம் விடப்படட்து.
1939 – இரண்டாம் உலகப் போர்: வார்சா ஜெர்மனியிடம் சரணடைந்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகியன முத்தரப்பு உடன்பாட்டில் பேர்லின் நகரில் கையெழுத்திட்டன.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் கெசெல் நகர் மீது கூட்டுப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திய தாக்குதல் ஆகும்.
1956 – அமெரிக்க வான்படைக் கப்டன் மில்பேர்ன் ஆப்ட் மக் 3 ஐத் தாண்டிய முதல் நபர் என்ற பெயரைப் பெற்றார். சிறிது நேரத்தின் பின்னர் விமானம் கட்டுக்கடங்காமல் வீழ்ந்து நொறுங்கியதில் அவர் ஆப்ட் கொல்லப்பட்டார்.
1959 – ஜப்பானின், ஹொன்ஷூ நகரில் இடம்பெற்ற புயலில் 5000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1961 – சியேரா லியோன் ஐநாவில் இணைந்தது.
1964 – ஜான் எஃப். கென்னடியை லீ ஹாவி ஒசுவால்ட் என்பவன் வேறு எவரினதும் தூண்டுதல் இன்றிக் கொலை செய்ததாக வாரன் ஆணையம் அறிக்கை வெளியிட்டது.
1977 – ஒண்டாரியோவில் 300 மீட்டர் உயர தொலைக்காட்சிக் கோபுரம் ஒன்றில் சிறு விமானம் ஒன்று மோதியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர். கோபுரம் இடிந்து வீழ்ந்தது.
1983 – இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் சிறை உடைப்பில் பல தமிழ் அரசியல் கைதிகள் தப்பி ஓடினர்.
1983 – ரிச்சார்ட் ஸ்டோல்மன் க்னூ செயற்றிட்டத்தைப் பகிரங்கமாக அறிவித்தார்.


1994 – மியான்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்க்க மக்களாட்சிக்கான தேசிய அமைப்பை ஓங் சான் சூ கீ உருவாக்கினார்.
1993 – அப்காசியாவில் சுகுமியில் ஜார்ஜியப் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
1996 – ஆப்கானிஸ்தானில் முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரைக் கைப்பற்றி அதிபர் புரானுடீன் ரபானியை ஆட்சியிலிருந்து விரட்டினர். முன்னாள் அதிபர் முகமது நஜிபுல்லா காபூல் நகர மின்சாரக் கம்பத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1997 – செவ்வாய் தளவுளவியுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
1998 – கிளிநொச்சி நகரம் விடுதலைப் புலிகளினால் ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கை மூலம் வெற்றி கொள்ளப்பட்டது.
1998 – கூகிள் தேடுபொறி ஆரம்பிக்கப்பட்டது.
2002 – கிழக்குத் தீமோர் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.

பிறப்புக்கள்

1696 – அல்போன்ஸ் மரிய லிகோரி, இத்தாலிய ஆயர், புனிதர் (இ. 1787)
1896 – கில்பர்ட் ஆஷ்டன், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (இ. 1981)
1907 – பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1931)
1925 – ராபர்ட் எட்வர்ட்சு, மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (இ. 2013)
1933 – நாகேஷ், நகைச்சுவை நடிகர் (இ. 2009)


1932 – யஷ் சோப்ரா, பாக்கித்தானி-இந்திய இயக்குனர் (இ. 2012)
1932 – ஒலிவர் வில்லியம்சன், பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு பெற்ற அமெரிக்கர்
1953 – மாதா அம்ருதானந்தமயி, இந்திய ஆன்மிகவாதி
1972 – கிவ்வினெத் பேல்ட்ரோ, அமெரிக்க நடிகை
1981 – லட்சுமிபதி பாலாஜி, இந்தியத் துடுப்பாட்ட வீரர்
1981 – பிரண்டன் மெக்கல்லம், நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்
1982 – லில் வெய்ன், அமெரிக்க ராப் இசைக்கலைஞர்

இறப்புகள்

1590 – ஏழாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1521)
1660 – வின்சென்ட் தே பவுல், பிரெஞ்சுப் புனிதர் (பி. 1581)
1833 – இராசாராம் மோகன் ராய், இந்திய சீர்திருத்தவாதி (பி. 1772)
1972 – சீர்காழி இரா. அரங்கநாதன், இந்தியக் கணிதவியலாளர் (பி. 1892)
1996 – முகமது நஜிபுல்லா, ஆப்கானிய அரசுத்தலைவர் (பி. 1947)
2008 – மகேந்திர கபூர், இந்தியப் பாடகர் (பி. 1934)

சிறப்பு நாள்

உலக சுற்றுலா நாள்

Popular Feed

Recent Story

Featured News