Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, September 26, 2019

1.40 லட்சம் பேருக்கு வேலை..! வாய்ப்பளிக்கும் அமேசான், பிளிப்கார்ட்..!


அடுத்தடுத்து நாட்களில் வரும் பண்டிகை தினங்களை முன்னிட்டு விற்பனை தொடங்கவுள்ள நிலையில், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் 1.4 லட்சம் பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்பை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தனது வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தும் வகையில் அமேசான் டாட் காம் என்ற இணைய வழி வர்த்தக நிறுவனம் ஹைதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.90,000 பேருக்கு வேலையளிக்கும் அமேசான் நிறுவனம்.!
அமேசான் ஆன்லைன் வர்த்தகம்



ஆன்லைன் வர்த்தகத்தின் ஜாம்பவானான அமேசான், சமீபத்தில் ஹைதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தை தொடங்கியது. இந்த புதிய வளாகம், 9 புள்ளி 5 ஏக்கர் நிலப்பரப்பும் ஆயிரக்கணக்கான மில்லியன் டாலர்கள் முதலீடும் கொண்டதாகும். இதில், சுமார் 15 ஆயிரம் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அப்போது அறிவிக்கப்பட்டன.


90,000 பேருக்கு வேலையளிக்கும் அமேசான் நிறுவனம்.!
60,000 மேற்பட்ட முழு நேரப் பணியாளர்கள்

2004-ஆம் ஆண்டு முதன்முதலில் இந்தியாவில் களமிறங்கிய அமேசான் நிறுவனம் ஹைதராபாத்திலிருந்துதான் தனது பணியை ஆரம்பித்தது. தற்போது, அந்நிறுவனத்தின் கீழ் இந்தியாவில் மட்டும் சுமார் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முழுநேர ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.




90,000 பேருக்கு வேலையளிக்கும் அமேசான் நிறுவனம்.!
ஒப்பந்தத் தொழிலாளர்கள்

அமேசான், தனது சொந்த நாட்டை விட இந்தியாவில் தான் அதிக அளவு ஊழியர்களைக் கொண்டுள்ளது. இதைத் தவிர்த்து 1.55 லட்சம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அமேசானுக்காக இந்தியாவில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




90,000 பேருக்கு வேலையளிக்கும் அமேசான் நிறுவனம்.!
அமேசான் இந்தியன் திருவிழா

இந்நிலையில், அடுத்து வரும் விழாக்காலங்களை முன்னிட்டு அமேசான் 90,000 வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பில் வாடிக்கையாளர்களிடம் இருந்த ஆடர் பெருவது முதல் டெவிவரி செய்வது வரையில் உள்ள விநியோக நிலையங்கள், விற்பனை பிரதிநிதிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் என அனைத்து துறையிலும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


90,000 பேருக்கு வேலையளிக்கும் அமேசான் நிறுவனம்.!
என்ன காரணம் தெரியுமா?



அமேசானின் இந்த திருவிழாக் கால விற்பனையின் போது தள்ளுபடிகள் ஏராளம் அளிக்கப்படும் என்பதால் விற்பனையும் அதிகரிப்பது வழக்கம். இதனால், இந்த தள்ளுபடி விற்பனைக் காலங்களில் விற்பனையை மேம்படுத்த, இன்னும் விரிவாக்கம் செய்யவுள்ளதாகவும், இதனால் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கக்கூடும் என்றும் அமேசான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


90,000 பேருக்கு வேலையளிக்கும் அமேசான் நிறுவனம்.!
90,000 தற்காலிக பணியாளர்கள்

இதுகுறித்து அமேசான் நிறுவனம் கடந்த செவ்வாயன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "பண்டிகைக் கால விற்பனை இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. எனவே, பொருட்கள் சேமிப்பு மையங்கள், வகை பிரிப்பு மையங்கள், விநியோக நிலையங்கள், வாடிக்கையாளர் சேவை மையம் என சுமார் 90,000-க்கும் மேற்பட்டோருக்கு தற்காலிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.




90,000 பேருக்கு வேலையளிக்கும் அமேசான் நிறுவனம்.!
பிளிப்கார்ட்டில் 50,000 வேலை

இதனிடையே, வால்மார்ட்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட் நிறுவனமும், விநியோக சங்கிலித் தொடர், சரக்குப் போக்குவரத்து கிளைகள் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு என பல்வேறு பணிகளுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடியான வேலைவாய்ப்பை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.




90,000 பேருக்கு வேலையளிக்கும் அமேசான் நிறுவனம்.!
எந்தெந்த பகுதிகளில் வேலை

இந்த வேலைவாய்ப்புகள், மும்பை, தில்லி, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, அகமதாபாத் மற்றும் புனே உள்ளிட்ட பெரு நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், நடப்பாண்டில் பண்டிகைக் கால விற்பனை உதவியாளர்களின் எண்ணிக்கையை இணையவழி வர்த்தக நிறுவனங்கள் இருமடங்கு அதிகரித்துள்ளன. இதனால், வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.