ரூ.40,000 ஊதியத்தில் இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் வேலை




மத்திய அரசின் இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் (RITES) காலியாக உள்ள இளநிலை மேலாளர் (Junior Manager) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

இளநிலை மேலாளர் (Junior Manager) பிரிவில் 22 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

Chartered Accountant (CA) படித்து முடித்திருக்க வேண்டும்.



சம்பளம்:

ரூ. 40,000 முதல் ரூ.1, 40,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

21 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் குறுகிய பட்டியல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 600 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 300 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:



ஆன்லைனில் https://rites.com/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://rites.com/web/images/stories/uploadVacancy/49%20-%2050_19%20finance%20regular%20ad%20JA,%20JM.PDF?fbclid=IwAR2N1D8zqkpQ76_W4AZuaWlEOc7CULMwVEE-mkyMQBhvDZ0lnf3a5Fv7GeY என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10-10-2019
Share:

Total Pageviews

Categories