Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 20, 2019

கி.மு., 600ம் ஆண்டிலேயே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்



சென்னை, தமிழகத்தில் கி.மு. 600ம் ஆண்டிலேயே எழுதத் தெரிந்த நகர மக்கள் வாழ்ந்தனர் என்பது கீழடி அகழாய்வு சான்றுகளால் வெளிப்பட்டுள்ளது.தமிழக அருங்காட்சியகங்கள் துறை சார்பில் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர காட்சிக்கூடம் அருங்காட்சியங்களுக்கான செயலி இசைக் கருவிகள் காட்சிக் கூடம் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது. தேர் மரச் சிற்பக்கூடம் நவீன ஓவியக் காட்சி கூடம் தொல்லியல் துறையின் மேம்படுத்தப்பட்ட இணையதளம் ஆகியவற்றை தமிழக தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் துவக்கி வைத்தார்.

தமிழக தொல்லியல் துறையின் 'கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்' என்ற நுாலையும் வெளியிட்டார். அமைச்சர் கூறுகையில் ''உலகத்தரம் வாய்ந்த பல்கலை கழகங்களுடன் இணைந்து சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு நடத்தப்படும். தமிழகத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒத்துழைப்புடன் இசைக்கருவி அருங்காட்சியகம் அமைக்கப்படும். தமிழக அருங்காட்சியகங்களின் தரம் உயர்த்தப்படும்'' என்றார்.

No comments:

Post a Comment