Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 20, 2019

சென்னை ஐஐடி-யில் விண்வெளி தொழில்நுட்ப மையங்களின் முதல் மாநாடு


விண்வெளி தொழில்நுட்ப மையங்களின் (செல்) முதல் மாநாடு சென்னை ஐஐடி-யில் நடைபெற்றது.
கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்ற இந்த இரண்டு நாள் மாநாட்டில் விண்வெளி ஆராய்ச்சிக்கான நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆய்வுகள் குறித்தும், மையங்களின் புதிய கண்டுபிடிப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பைப் பெறும் வகையில், இந்திய விண்வெளி ஆய்வு மையமும் (இஸ்ரோ), மத்திய விண்வெளி துறையும் இணைந்து முன்னணி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் விண்வெளி தொழில்நுட்ப மையங்களை அமைத்துள்ளன.


சென்னை, மும்பை, கான்பூர், காரக்பூர் ஐஐடி-க்களிலும், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்திலும் (ஐஐஎஸ்சி) இந்த மையங்கள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன. இப்போது, குவாஹாட்டி, ரூர்க்கி ஐஐடி-க்களிலும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களின் மாநாடு சென்னை ஐஐடி-யில் நடைபெற்றது. இதுகுறித்து பேராசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறுகையில், வளர்ந்து வரும் விண்வெளி ஆராய்ச்சி தொழில்நுட்பத்தில் இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களை திறம்பட வெற்றிகரமாக செயல்படுத்துவதில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பும் மிக அவசியம் என்றார்.

No comments:

Post a Comment