Monday, September 16, 2019

ஆசிரியருக்கு பாராட்டு விழா

கண்டமங்கலம்: கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சவுந்தர்ராஜனின் 32 ஆண்டு கல்விப்பணியை பாராட்டி முன்னாள் மாணவர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ராஜாராமன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் வரதராசு, சேகர், செல்வம் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் பூபதி வரவேற்றார். தலைமையாசிரியர் ராஜாராமன், தொழிற்கல்வி ஆசிரியர் சவுந்தர்ராஜன் 32 வருட கல்விப்பணியை பாராட்டி பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.

நல்லாசிரியர் விருதுபெற்ற புதுச்சேரி கணுவாய்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை அருண்மொழி சவுந்தராஜனுக்கு பள்ளி ஆசிரியர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.ஆசிரியர்கள் குமரவேல், ஞானவேல், உமாமகேஸ்வரி, கென்னடி, புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள் ரகுமான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.விழாவில் கடந்த 2003-2004ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, சக நண்பர்களுடன் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.முன்னாள் மாணவர் அக்பர் அலி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment