Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, September 7, 2019

பள்ளிகளுக்கு சத்து மாத்திரை வழங்குவது நிறுத்தம்


6 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டத்தை, சுகாதாரத்துறை துவக்கியது. வியாழன் தோறும் மதிய உணவுக்குப்பின் (பெர்ரோஸ் சல்பேட் மற்றும் போலிக் ஆசிட்) இரும்பு சத்து மாத்திரை வழங்கப்பட்டு வந்தது.

இம்மாத்திரையை கடந்த இரு மாதங்களாக சுகாதாரத்துறை வழங்கவில்லை.சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜூலைக்கு பின் இரும்பு சத்து மாத்திரை வரவில்லை. காரணம் தெரியவில்லை. இந்த மாத்திரை வழங்குவது நிறுத்தப்பட்டால் சத்து குறைபாட்டால் மாணவர்கள் பாதிக்கப்படலாம், என்றார்.

No comments:

Post a Comment