Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 8, 2019

தமிழக மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி-அமைச்சர் செங்கோட்டையன்



மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பது குறித்து ஆராயப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசுமுறை பயணமாக பின்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அந்த நாட்டின் கல்வமுறையை அறிந்து வருவதற்காக சென்றதாக தெரிவிக்கப்பட்டது.



தனது சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு அவர் தமிழகம் வந்துவிட்ட நிலையில் நேற்று ஈரோட்டில் விழா ஒன்றில் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், பின்லாந்து நாட்டில் மாணவர்கள் படிக்கும் போதே தொழிற்பயிற்சி பயிற்சி வழங்கப்படுகிறது. இது போன்ற பாட திட்டத்தை தமிழகத்திலும் கொண்டு வந்து 9-ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி அளிப்பது குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்

No comments:

Post a Comment