Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 20, 2019

கல்லூரிகளில் 'இ -லீடர்' திட்டம்


"தமிழகத்தில் கலை அறிவியல் கல்லுாரிகளில் மாணவர்களை தொழில் முனைவோராக்கும் 'இ - லீடர்' திட்டம் துவங்கப்படவுள்ளது" என தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்பு பயிற்சி மைய (இ.டி.ஐ.ஐ.) இயக்குனர் நாகராஜன் தெரிவித்தார்.நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் தொழில்முனைவோர் மேம்பாடு குறித்து அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதுவரை பொறியியல் கல்லுாரி பாலிடெக்னிக்குகளில் மட்டும் தொழில்முனைவு மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில் முதன்முறையாக கலை மற்றும் அறிவியல் பிரிவுகளை கொண்ட மதுரை காமராஜ் பல்கலையில் தொழில் முனைவு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இம்மையம் மூலம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் தொழில் முனைவு செயல்பாடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கல்லுாரிகளில் 'இ லீடர்' என்ற பெயரில் மாணவர் குழு ஏற்படுத்தி அவர்களுக்கு பல்கலை தொழில் முனைவு மையம் சார்பில் பயிற்சி அளிக்கப்படும்.இத்திட்டம் மூலம் ஓராண்டில் ஒவ்வொரு கல்லுாரியிலும் குறைந்தபட்சம் 20 பேர் தொழில் முனைவோர்களாக உருவாக்கப்படுவர். அவர்களுக்கான பயிற்சி வகுப்பு பயிலரங்குகள் உள்ளிட்ட உதவிகள் இ.டி.ஐ.ஐ. சார்பில் வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment