
இதுகுறித்து அச்சங்க மாநில தலைவர் சங்கரலிங்கம் தெரிவித்துள்ளதாவது: மாணவர் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் புதிய பாடத் தொகுதிகளை ஏற்படுத்தி 6 பாடங்களுக்கு பதில் 5 பாடங்களாக குறைத்தும், 500 மதிப்பெண்ணுக்கு தேர்வு எழுதும் வகையில் கொண்டுவரப்பட்ட மாற்றம் வரவேற்கத்தக்கது.அதேநேரம், கலைப் பிரிவு கணினி பயன்பாடு, அறிவியல் பிரிவில் கணினி அறிவியல், தொழில் கல்வியில் கணினி தொழில்கல்வி பாடங்கள் இருந்தன.
ஆனால் தற்போது மாற்றியமைக்கப்பட்ட தொகுப்பில் கலைப் பிரிவில் கணினி பாடங்கள் இல்லை. அதிக மாணவர்கள் சேர்க்கையை கருத்தில் கொண்டு கலைப் பிரிவு பாடத் தொகுப்பில், கணினி பயன்பாடு அல்லது கணினி அறிவியல் பாடத்தை சேர்க்க வேண்டும்.அத்துடன் அறிவியல் பாடத் தொகுப்பில் இடம் பெறும் கணினி அறிவியல் பாடத்தின் மதிப்பெண்ணை பொறியியல் படிப்பிற்கான &'கட்ஆப்&' மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.



No comments:
Post a Comment