Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, September 7, 2019

டிக்டாக் வீடியோவால் அடித்த அதிர்ஷ்டம்..! ஒலிம்பிக் செல்லும் செல்லங்கள்



டிக்டாக் என்றாலே சமூக கேடு எனும் கருத்து மக்கள் மத்தியில் நிலவி வரும் நிலையில், அதை நல்ல முறையிலும் வளர்ச்சிக்காக பயன்படுத்தலாம் என நிரூபித்து காட்டி இருக்கின்றனர் இரு பள்ளி குழந்தைகள். கொல்கத்தாவை சேர்ந்த சங்கமித்ரா பள்ளியில் பயின்று வருபவர்கள், ஜசிகா கான், மொஹம்மத் அசாஜுடின்.






இவர்கள் பள்ளி செல்லும் வழியில் சீருடை மற்றும் புத்தகப்பையுடன் குட்டிக்கரணம் அடிக்கும் வீடியோ ஒன்று டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானது.சாலையில் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி இவர்கள் தங்கள் திறமையை காட்டியதை கண்டு வியந்த, 3 முறை தங்கம் வென்ற ஜிம்னாஸ்டிக் ஒலிம்பிக் வீராங்கனையான நடியா கோமானேசி, தனது சமூக வலைதள பக்கத்தில் சிறுவர்களின் வீடியோவை பகிர்ந்தார்.
இதனால் குறிப்பிட்ட சிறுவர்கள் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சரான கிரண் ரிஜிஜூ வின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட, தேசிய விளையாட்டு துறையில் முழு நேர ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.




இந்த பயிற்சியில் மற்றும் தேசிய போட்டிகளில் இவர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் கூட கலந்து கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதால், ஒட்டுமொத்த இந்தியர்களும் இந்தகுட்டீஸ்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment