Tuesday, September 24, 2019

MBA ADMISSION சென்னை ஐ.ஐ.டி., அறிவிப்பு


சென்னை ஐ.ஐ.டி.,யில், நிர்வாக, எம்.பி.ஏ., படிப்புக்கான, &'அட்மிஷன்&' அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை, ஐ.ஐ.டி.,யில், மேலாண்மை படிப்புகள் துறை சார்பில், நிர்வாக எம்.பி.ஏ., படிப்பு நடத்தப் படுகிறது.


மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஏற்கனவே துவங்கி விட்டது. அக்டோபர், 21 வரை பதிவுகளை மேற்கொள்ளலாம்.விண்ணப்பதாரர்களின் விபரங்கள் பரிசீலிக்கப்பட்டு, தேர்வானவர்களின் விபரம், நவம்பரில் அறிவிக்கப்படும். டிசம்பரில் வகுப்புகள் துவங்கும். ஏதாவது ஒரு பட்டப் படிப்பில், 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தொழில் நிறுவனங்களில் குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பட்டதாரிகளுக்கு, துறை ரீதியான தகுதி தேர்வும், நேர்முக தேர்வும் நடத்தப் படும் என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துஉள்ளது.

No comments:

Post a Comment