பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து.
குறள்: 05
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
இருள்சேர் - மயக்கம், கலக்கம் (அறியாமை)
இருவினையும் – நல்வினையும் தீவினையும்
சேரா - சேர்வதில்லை.
இறைவன் - கடவுள்
பொருள்சேர் - உண்மையான
புகழ்புரிந்தார் – புகழை விரும்பியவர்
மாட்டு – இடத்து
கடவுளின் உண்மையானப் புகழை விரும்பி அக்கடவுளிடத்து அன்பு செலுத்துபவரிடம் அறியாமையினால் உண்டான நல்வினைத் தீவினை என்ற இரண்டு வினைகளும் நெருங்குவதில்லை.





