Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 30, 2019

கண் எரிச்சல், முடி உதிர்தல் நீங்கும் வில்வகாய்


நமக்கு வயிற்று வலி ஏற்படுவதற்கு பலக் காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமாக நாம் உண்ணும் உணவால் தான் இருக்கும். மேலும் நம்முடைய வயிற்றில் உள்ள தொற்று கிருமிகளும் ஆகும். இந்த வில்வ தளிரை வதக்கி நாம் சூடாக்கி குடித்து வந்தால் நம் வயிற்றில் உள்ள நுண்ணயிர்கள் கொல்லப்படும். இதனால் நம் வயிற்று வலி நீங்கும். மேலும் இது வயிறு தொடர்பான பல கோளாறுகளை சரி செய்ய உதவும்.



இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தான் இந்த முடி உதிர்தல். சிறு வயதிலே முடி கொட்டி விடுவதால் நமக்கு மனஅழுத்தம் மற்றும் வயதான தோற்றம் ஏற்படுகிறது. இதில் இருந்து விடுபட இந்த வில்வ இலை மிக சிறந்த மருந்தாக செயல்படும். இதற்க்கு வில்வ காயை எடுத்து அரைத்து அதனுடன் பால் கலந்து நம்முடைய தலைக்கு தேய்த்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு கண் எரிச்சல். மற்றும்
முடி உதிர்தல் நீங்கும்.