Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 28, 2019

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபாலில் ஓட்டளிக்கலாம்- மத்திய அரசு அறிவிப்பு

பொது தேர்தல்களின் போது, முப்படைகளை சேர்ந்த பாதுகாப்புவீரர்கள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், தங்கள் ஓட்டுக்களை அளிக்க, ஓட்டுச்சாவடிக்கு வரமுடியாது. இதனால், அவர்கள், தபால் மூலம் ஓட்டளிக்கும் நடைமுறை அமலில் உள்ளது. இதைப் போலவே, 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்கள் உடல்நிலை காரணமாக, ஓட்டுச்சாவடி வரை வரமுடியாத நிலை உள்ளது.



இதை தவிர்க்கும் வகையில், அவர்களையும் தபால் ஓட்டு அளிக்க, வழிவகை செய்ய வேண்டும் என, தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்தது. இதை ஏற்ற மத்திய சட்டத்துறை அமைச்சகம், 80 வயதுக்கு மேற்பட்டவர்களும், மாற்றுத்திறனாளிகளும், அடுத்த தேர்தல் முதல், தபால் மூலம் தங்கள் ஓட்டு அளிக்கலாம் என்று மத்திய அரசு, அறிவித்துள்ளது.