Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 14, 2019

'ஸ்டார்ட் அப்' மாணவருக்கு கட்டாய வருகைப்பதிவில் இருந்து விலக்கு


'ஸ்டார்ட் அப்' முயற்சியில் ஈடுபடும், பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு, தேர்வு எழுதுவதற்கு, கட்டாய வருகைப்பதிவில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.மத்திய அரசு, 'ஸ்டார்ட் அப்' திட்டங்களை ஊக்குவித்து வருகிறது.
குறிப்பாக, இளைஞர்கள் அதிகளவில், தொழில் முனைவோராக, பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. 'பொறியியல் கல்லுாரி மாணவர்கள், வேலை தேடுவோராக இல்லாமல், வேலை வழங்குவோராக விளங்க வேண்டும்; கல்லுாரியில் படிக்கும் போதே, புதுமை ஐடியாக்களுடன், ஸ்டார்ட் அப் துவங்குவதற்கும், தொழில் முனைவோராக உருவெடுப்பதற்கும் ஊக்குவிக்க வேண்டும்' என, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அகிலஇந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சிலை அறிவுறுத்தியுள்ளது.'குறிப்பிட்ட அளவு வருகைப்பதிவு இருந்தால் தான், செமஸ்டர் உள்ளிட்ட தேர்வுகளை, பொறியியல் கல்லுாரி மாணவர்கள் எழுத முடியும்' என்ற விதி உள்ளது. தற்போது, இந்த விதி தளர்த்தப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லுாரி நிர்வாகத்தினர் கூறுகையில், 'ஸ்டார்ட் அப் துவங்கி உள்ளமற்றும் தொழில்முனைவு முயற்சிகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, வருகைப்பதிவில் இருந்து விலக்களிக்கலாம். 'அந்தந்த கல்லுாரிகளில் உள்ள ஆய்வுக்குழு, இதுதொடர்பாக முடிவெடுக்கலாம் என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவுறுத்தியுள்ளது' என்றனர்.