Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, November 22, 2019

வரலாற்றில் இன்று 22.11.2019

நவம்பர் 22 கிரிகோரியன் ஆண்டின் 326 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 327 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 39 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1574 – சிலியின் ஜுவான் பெர்னாண்டஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
1908 – அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
1922 – துட்டன்காமுன் என்ற எகிப்திய பாரோ வின் 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமாதி கண்டுபிடிக்கப்பட்டது.
1935 – பசிபிக் பெருங்கடலைத் தாண்டி முதன்முறையாக விமானத் தபால்களை விநியோகிக்கும் பணியில் சைனா கிளிப்பர் என்ற விமானம் கலிபோர்னியாவை விட்டுப் புறப்பட்டது. (இவ்விமானம் நவம்பர் 29 இல் 110,000 தபால்களுடன் மணிலாவை அடைந்தது.)
1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியரின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து கிரேக்கப் படைகள் அல்பேனியாவுக்குள் நுழைந்து கோரிட்சாவை விடுவித்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனிய தளபதி பிரீட்றிக் பவுலஸ், ஸ்டாலின்கிராட்டில் தாம் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக ஹிட்லருக்கு தந்தி மூலம் செய்தி அனுப்பினான்.
1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தலைவர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில், சீனத் தலைவர் சியாங் காய்-செக் ஆகியோர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் சந்தித்தனர்.
1943 – லெபனான், பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1956 – ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மெல்பேர்ணில் ஆரம்பமாயின.





1963 – அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப். கென்னடி டெக்சாசில் லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். டெக்சாஸ் மாநில ஆளுநர் “ஜோன் கொனலி” படுகாயமடைந்தார். அதே நாளில் உதவி-ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் அமெரிக்காவின் 36வது அதிபராக ஆனார்.
1965 – இந்தோனீசியாவின் கம்யூனிசத் தலைவர் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
1974 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றது.
1975 – பிரான்சிஸ்கோ பிராங்கோவின் மறைவை அடுத்து ஜுவான் கார்லொஸ் ஸ்பெயின் மன்னனானார்.
1989 – மேற்கு பெய்ரூட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் லெபனான் ஜனாதிபதி ரெனே மோவாட் கொல்லப்பட்டார்.
1990 – மார்கரட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியைத் துறந்தார்.
2002 – நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
2003 – ஜோர்ஜியாவில் அதிபர் எடுவார்ட் ஷெவர்நாட்சேயின் எதிராளிகள் நாடாளுமன்றத்தைத் தம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து அதிபரைப் பதவி விலகுமாறு கோரினர்.
2005 – ஜேர்மனியின் முதலாவது பெண் அதிபராக (சான்சிலர்) ஏங்கலா மேர்க்கெல் தெரிவு செய்யப்பட்டார்.
2005 – எக்ஸ் பாக்ஸ் 360 நிகழ்பட விளையாட்டு இயந்திரம் வெளியிடப்பட்டது.
2007 – இலங்கை அரசாங்கம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது.





பிறப்புக்கள்

1830-ஜல்காரிபாய், இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனை (இ. 1890)
1890 – சார்லஸ் டி கோல், பிரெஞ்சுத் தளபதியும், அரசியலாளரும் (இ. 1970)
1939 – முலாயம் சிங் யாதவ், இந்திய அரசியல்வாதி
1970 – மாவன் அத்தப்பத்து, இலங்கையின் துடுப்பாளர்.

இறப்புகள்

1963 – ஜோன் எப். கென்னடி, 35-வது அமெரிக்க ஜனாதிபதி, (பி. 1917)
1976 – மு. திருச்செல்வம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் (பி. 1907)

சிறப்பு நாள்

லெபனான் – விடுதலை நாள் (1943)