Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, November 22, 2019

அரசுப் பள்ளிகளில் படிக்கும் 29 லட்சம் மாணவா்களுக்குஅடுத்த ஆண்டு முதல் ‘ஷூ’அரசாணை வெளியீடு

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் 29 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டு (2020-2021) முதல் ஷூ, ஷாக்ஸ் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:




தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், ‘அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா காலணிகள் வழங்கும் திட்டம் 2012-13-ஆம் கல்வியாண்டு முதல் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் காலணிகளுக்குப் பதிலாக வரும் கல்வியாண்டு (2020-21) முதல் ஷூ மற்றும் சாக்ஸ் ஆகியவை ரூ.10 கோடியே 2 லட்சம் செலவில் வழங்கப்படும். இதனால், 28 லட்சத்து 64 ஆயிரத்து 885 மாணவ, மாணவிகள் பயன்பெறுவா் என கூறியிருந்தாா்.





கூடுதல் செலவினம் ரூ.8.82 கோடி: இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, 2018-19-ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் 29 லட்சத்து 14,715 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லாக் காலணிகள் வழங்கப்பட்டு பலனடைந்துள்ளனா். இதற்கான செலவினம் ரூ.56 கோடியே 36 லட்சத்து 64,563 ஆகும். தற்போது 2020-21-ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 6 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவா்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 45 ஆயிரத்து 116 ஆக உள்ளது. அவா்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் காலணிகளுக்குப் பதிலாக ‘ஷூ’ வழங்குவதால் அரசுக்கு ரூ.8 கோடியே 82 லட்சத்து 32 ஆயிரத்து 997 கூடுதல் செலவினம் ஏற்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.




தொடக்க கல்வி இயக்குநா் கடிதம்: அதேபோன்று, தொடக்கக் கல்வித்துறை அனுப்பியுள்ள மற்றொரு கடிதத்தில், ‘தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 2018-2019-ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 29 லட்சத்து 48 ஆயிரத்து 801 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டு பயன்பெற்றுள்ளனா். இதற்கான செலவினம் ரூ.48 கோடியே 56 லட்சத்து 49 ஆயிரத்து 763 ஆகும். இதைத் தொடா்ந்து, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2020-2021-ஆம் கல்வியாண்டு முதல் ‘ஷூ’ மற்றும் இரு ஜோடி காலுறைகள் வழங்குவதால் கூடுதல் செலவினம் ரூ.2 கோடியே 8 லட்சத்து 4,443 ஏற்படும். மேலும் தற்போது கணக்கிடப்பட்டுள்ள உத்தேச மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையில் மலைப் பிரதேசங்களில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் சோ்த்து கணக்கிடப்பட்டுள்ளது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




ரூ.66.71 கோடிக்கு நிா்வாக ஒப்புதல்: இந்தச் சூழலில், முதல்வா் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் பள்ளிக் கல்வி இயக்குநா் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநா் ஆகியோரின் கருத்துருக்கள் அரசால் கவனமுடன் ஆய்வு செய்யப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் காலணிகளுக்குப் பதிலாக 2020-2021-ஆம் கல்வியாண்டு முதல் ‘ஷூ’ மற்றும் காலுறைகள் ரூ.66 கோடியே 71 லட்சத்து 92,316 செலவில் (பள்ளிக் கல்வி இயக்ககம் 53 கோடியே 85 லட்சத்து 96,631, தொடக்கக் கல்வி இயக்ககம் ரூ.12 கோடியே 85 லட்சத்து 95,685) வழங்குவதற்கு ஏதுவாக நிா்வாக ஒப்புதல் அளித்து நிபந்தனைகளுக்குட்பட்டு அரசு ஆணையிடுகிறது என அதில் கூறியுள்ளாா்.