Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, November 23, 2019

ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை.!


மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CIPET) காலியாக உள்ள டெக்னிக்கல் அலுவலர், மூத்த டெக்னிக்கல் அலுவலர், டெக்னிக்கல் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.




நிர்வாகம் : மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 34

பணியிடம் : சென்னை, தமிழ்நாடு

பணி மற்றும் காலிப் பணியிட விவரம்:-

மூத்த தொழில்நுட்ப அலுவலர் - 03

ஊதியம் : மாதம் ரூ.67,700

தொழில்நுட்ப அலுவலர் - 03

ஊதியம் : மாதம் ரூ.56,100

உதவி தொழில்நுட்பவியலாளர் - 04




ஊதியம் : மாதம் ரூ.44,900

தொழில்நுட்ப உதவியாளர் (கிரேடு III) - 01

ஊதியம் : மாதம் ரூ.67,700

Sr. Officer (Finance & Accounts) - 02

ஊதியம் : மாதம் ரூ.56,100

Officer (i) Personnel & Administration (ii) Finance & Accounts - 04

ஊதியம் : மாதம் ரூ.44,900

Asst. Officer (i) Personnel & Administration (ii) Finance & Accounts - 12

Administrative Assistant Gr. III - 02

Accounts Assistant Gr. III - 03




ஊதியம் : மாதம் ரூ.21,700

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

கல்வித் தகுதி :-
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வணிகவியல், பொது நிர்வாகவியல், மேலாண்மைத் துறையில் முதுகலை, எம்பிஏ, சிஏ, ஐசிடபுள்ஏ, பொறியியல் துறையில் மெக்கானிக்கல், வேதியியல், பாலிமர், பிளாஸ்டிக் பிரிவில் பிஇ, பி.டெக், எம்இ, எம்.எம்டெக் முதல் வகுப்பில் முடித்து 2 அல்லது 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.




வயது வரம்பு : 32 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cipet.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : Principal Director (New Projects), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai-600 032




இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cipet.gov.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 20.12.2019 தேதிக்குள் கிடைக்கும் படி விண்ணப்பிக்க வேண்டும்.