Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, November 23, 2019

6.83 லட்சம் பணியிடங்கள் பல துறைகளில் காலி


இது குறித்து எழுத்துபூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் அவர் கூறியதாவது: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் மார்ச் 1, 2018 நிலவரப்படி 6.83 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில்'குரூப்-சி' பிரிவில் 5.74 லட்சம் இடங்களும், 'குரூப் - பி' பிரிவில் 89 ஆயிரம் இடங்களும்,'குரூப் - ஏ' பிரிவில் 19 ஆயிரம் இடங்களும் காலியாக உள்ளன.



சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் 2019 -20ல் 1.05 பணியிடங்களை நிரப்பும் பணியை பணியாளர் தேர்வாணையம் துவக்கி உள்ளது. மொத்தத்தில் 4.08 லட்சம் காலி பணியிடங்களை நிரப்பும் பணியில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் தபால் துறை ஈடுபட்டுள்ளன. தேர்வு முறைகளை காலதாமதமின்றி செய்ய 'ஆன்லைன்' முறையிலான எழுத்து தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.



சி.பி.ஐ.யில் 1,000 பணியிடங்கள் காலிசி.பி.ஐ.யில் 5,532 ஊழியர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் தற்போது 4503 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் 1,029 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜிதேந்திரா சிங் தெரிவித்தார்.