Subscribe Us

Thursday, November 21, 2019

அறிவியல் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

கடந்த, 2018ம் ஆண்டிற்கான, அறிவியல் சாதனையாளர்கள் விருது பெற, டிச., 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து, அறிவியல் நகரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:




அறிவியல் நகரம் சார்பில், 'தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது, தமிழ்நாடு முதுநிலை அறிவியலாளர் விருது மற்றும் தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருதுகள்' வழங்கப்படுகின்றன.விருதுக்கான முன்மொழிதல் படிவம், விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்க அடிப்படை தகுதிகள் மற்றும் விதிகள், www.sciencecitychennai.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விருப்பம் உள்ள அறிவியலாளர்கள், முன்மொழிதல் மற்றும் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, டிச., 20க்குள் பூர்த்தி செய்து, தபால் வாயிலாக அல்லது நேரடியாக அளிக்கலாம்.




'அறிவியல் நகரம், காந்தி மண்டப சாலை, பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகம், சென்னை - 25' என்ற முகவரிக்கு, விண்ணப்பங்களை அனுப்பலாம். மேலும் விபரங்களை, 044 - 2445 4054 என்ற தொலைபேசி எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Popular Feed