Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, November 15, 2019

பாதுகாப்பு இல்லாத வகுப்பறைகளை இடிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

வேலுார் மாவட்டத்தில், 23 பள்ளிகளில், பாதுகாப்பு இல்லாத, 115 வகுப்பறைகளை இடிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இடிந்து விழும் நிலையிலுள்ள, பாதுகாப்பற்ற கட்டடங்கள் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியது.



இதுதொடர்பாக, வேலுார் மாவட்டத்தில், பள்ளிக் கட்டடங்களின் தரம் குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இதில், 23 பள்ளி வளாகங்களில், சிதிலமடைந்த நிலையிலுள்ள,115 வகுப்பறைகள் பாதுகாப்பு இல்லாதது என, தெரிய வந்தது. இதுதொடர்பாக, வேலுார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், பள்ளிக் கல்வித்துறைக்கு அறிக்கை அனுப்பினார். இதையடுத்து, பாதுகாப்பு இல்லாத, 115 வகுப்பறைகளை இடிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.